சீனாவில் சூறாவளி தாக்குதல்…. வெளியேற்றப்படும் மக்கள்…

0

சீனாவின் ஷங்காய் நகரில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சூறாவளியும் ஏற்பட்டுள்ளநிலையில், கரையோர பிரதேசங்களில் இருந்து 360,000க்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளியானது, மணிக்கு 6.2 கிலோமீற்றர் வேகத்தில் நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, ஷங்காய் நகரில், இரண்டாம்கட்ட செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஷங்காயில் உள்ள இரண்டு சர்வதேச விமான நிலையங்களில், அனைத்து பயணிகள் விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதுடன், அதிவேக தொடருந்து சேவைகள், இன்று மதியம் வரையில், முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here