சீனாவின் ஜிசாங் பிராந்தியத்தில் 5.7 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் தென்மேற்கு சீனாவில் ஜிசாங் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியைத் தாக்கியுள்ளது.
ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இதனை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 20 கிமீ (12.42 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாவில்லை.