சீனாவில் அடையாளங்காணப்பட்ட டெல்டா வைரஸ்…..

0
The photo taken on July 30, 2021 shows a boy receiving nucleic acid testing for the Covid-19 coronavirus in Huaian, in eastern China's Jiangsu province, as China raced to contain its worst coronavirus outbreak in months. (Photo by STR / AFP) / China OUT

சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான சேவைகள் 2 வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நான்ஜிங் நகரில் கொரோனா பரிசோதனைகள் கடுமையாக்கப்பட இருப்பதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்ஜிங்கில் இருந்து தற்போது பீஜிங் உட்பட 15 நகரங்களுக்கு இந்த டெல்டா வகை வைரஸ் பரவி இருக்கிறது.

பீஜிங்கில் கடந்த 175 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்திருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

புதிய டெல்டா வகை வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் 92,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை மொத்தம் 4,636 பேர் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here