சீனாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் வெடிப்பு விபத்து….

0

சீனாவின் ஷாங்காய் (Shanghai) மாகாணத்தில் உள்ள சினோபெக்கின் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் (Sinopec’s petrochemical complex) எத்திலீன் கிளைகோல் ஆலை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் தீ வெடிப்பு விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜின்ஷான், ஃபெங்சியான் மாவட்ட தீயணைப்பு குழு மற்றும் நகரின் இரசாயன தொழில் பூங்கா தீயணைப்பு குழு ஆகியவை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பட்டனர்.

மேலும் மீட்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதாக ஷாங்காய் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் காலை 9 மணி நிலவரப்படி தீ வெடிப்பு கட்டுக்குள் கொண்டுவர பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here