சீனாவின் நிலநடுக்கம்.. இலேசாக குலுங்கிய கட்டிடங்கள்

0

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று 6 ஆம் திகதி காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5 புள்ளி 1 ஆக பதிவாகி உள்ளது.

யிபின் நகரில் உள்ள சிங்வென் கவுண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் பல கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் சாலையோரங்களில் கடைகளை வைத்திருப்பவர்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும், ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்ட காட்சியும் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here