சீனாவின் அதிவேக சாலையில் கோர விபத்து

0

சீனாவின் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Guizhou மாகாணத்தின் தலைநகரான Guiyang நகரின் தென்கிழக்கே உள்ள Sandu கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட பேருந்தில் 47 பேர் பயணம் செய்த நிலையில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here