சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவு

0

கடந்த மாதம் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா குற்றம் சாட்டியது.

இந்திய- சீன படைகளுக்கு இடையே லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே 5-ம் திகதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 படையினர் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இருநாட்டுகளும் எல்லையில் படைகளை அதிகரித்தன. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைப்பகுதியில் இருந்து வீரர்கள் திரும்பப்பெறப்பட்டனர். ஆனாலும், தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் சுமார் 100 சீன இராணுவ வீரர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் பரஹோடி பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஆனால், சில மணிநேரங்கள் பரஹோடி பகுதிக்குள் நுழைந்திருந்த சீன படையினர் இந்திய படையினர் வருவதற்குள் இந்திய எல்லையில் இருந்து பின்வாங்கி தங்கள் நாட்டிற்கே சென்றுள்ளனர்.

இந்த சம்பவம், மீண்டும் இருநாட்டு படைகளுக்கு இடையேயான மோதலை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here