சீதா வேடத்திற்கு ரூ.12 கோடி கேட்ட பிரபல நடிகை… அதிர்ச்சியில் படக்குழு!

0

பாகுபலி போன்ற பிரம்மாண்ட சினிமாக்கள் தொடர்ந்து வெற்றிப்பெறுவதை அடுத்து தற்போது இதிகாசக் கதைகளின் மீது பல இயக்குநர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருந்துவரும் தேசாய் தற்போது சீதா பார்வையில் இருந்து ராமாயணக் கதையை இயக்க இருக்கிறாராம்.

இந்தக் கதையில் சீதாவாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரினா கபூரை படக்குழு அணுகியதாகவும் இந்தப் படத்திற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கரினா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாக்களில் அதிகம் தலைக்காட்டாமல் இருக்கிறார். இதனால் சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் இதனால் அதிர்ந்துபோன படக்குழு வேறொரு நடிகையை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பே ராமாயணக் கதையை பல இயக்குநர்கள் திரைப்படமாக்கி இருக்கின்றன. மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ராமாயணக் கதை எடுக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் தற்போது இயக்குநர் தேசாய் சீதாவின் கண்ணோட்டத்தில் இருந்து இராமாயணக் கதையைப் படமாக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here