சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பிரித்தானியா!

0

பிரித்தானியாவின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22ம் திகதி அதிகாலை 4 மணி முதல் 8 நாடுகளின் பெயர்களை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமான, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, எகிப்து, ஓமான், பங்களதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளே இவ்வாறு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த 8 நாடுகளுக்கும் பிரித்தானிய பிரஜைகள் எதிர்வரும் 22ம் திகதிக்கு பின்னர் பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, குறித்த நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகைத் தருவோர், கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளையும் செலுத்தியிருந்தால், தனிமைப்படுத்தப்படாது, வெளியேற அனுமதிக்கப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here