சிவனுக்கு உகந்த வில்வத்தின் சிறப்புக்கள் என்ன…?

0

வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

சிவ பெருமானுக்கு வில அர்ச்சனை செய்ய நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதே போல் சிவராத்திரியின் போது வில்வ அர்ச்சனை செய்ய ஈசன் மோட்சம் கொடுப்பார்.

பூஜைக்குப் பயன்படுத்துகின்ற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகாசிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கு எப்படி துளசி எனும் அற்புத மூலிகை பிடித்ததாக இருக்கின்றதோ, அதே போல் வில்வ மரத்தின் இலை, பழம் சிவ பெருமானுக்கு இஷ்டமானது.

வில்வ மரத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் பால் ஊற்றி வணங்குவதால் செல்வம் பெருகும். வில்வ மரத்திடம் நம் குறைகளைச் சொல்லி வழிபட அது விரைவில் நிவர்த்தி ஆகும். ஏனெனில் வில்வ மரத்திற்கு நாம் கேட்கும் பிரார்த்தனைகள் சிவனிடத்தில் முறையிட்டு அதை தீர்க்கக் கூடிய வல்லமை மிக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here