சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 20வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில், அதன்பின்னர் புதுவை, லண்டன், சென்னை ஆகிய பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 20வது படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘எஸ்கே 20’ படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளன. ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த க்யூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. .
இன்னும் டைட்டில் வைக்கப்படாத ‘எஸ்கே 20’ திரைப்படத்தில் உக்ரைன் நாட்டுமரியா போஷாப்கா சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், மேலும் ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ் தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.