சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்

0

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக காலமாகி வருவது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கேவி ஆனந்த், தாமிரா, எஸ்பி ஜனநாதன் உள்பட பலர் அடுத்தடுத்து கொரோனா தொற்று, மாரடைப்பு காரணமாக காலமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றும் திரையுலகைச் சேர்ந்த மேலும் ஒருவர் காலமாகி இருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அவர்களின் உதவி இயக்குநரும், அவர் இயக்கிய ஒரு சில படங்களில் நடித்தவருமான பவுன்ராஜ் என்பவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இயக்குனர் பொன்ராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மறைந்த பவுன்ராஜ் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here