சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன்!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராஜூ ஜெயமோகன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான ராஜூ ஜெயமோகன் முதல் நாளில் இருந்தே கலகலப்பாக இருந்து வருகிறார் என்பதும் அவர் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை தாக்குபிடித்து இருக்கும் அளவுக்கு திறமை உள்ளவர் என்று இப்போதே நெட்டிசன்கள் அவருக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே ’கனா காணும் காலங்கள்’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ராஜூ ஜெயமோகன், ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தில் கவினுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ என்ற திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்கி வருகிறார் என்பதும் இவர் இயக்குநர் அட்லியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here