சிலி நாட்டை தக்கிய பயங்கரமான மணற்புயல்

0

வடக்கு சிலியின் முக்கிய நகரங்களில் பயங்கரமான மணற்புயல் தாக்கியுள்ளது.

அதில் 9000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

சவுத் அமெரிக்காவின் சிலி நாட்டில் அட்டகாமா பாலைவனத்திற்கு மிக அருகில் உள்ள டியகோ டி அல்மாக்ரோ என்ற நகரத்தை மிகப்பெரிய ராட்சச மணற்புயல் தாக்கியதில் அந்த நகரம் பெரும் சேதம் அடைந்துள்ளது.

இந்த மணற்புயல் தாக்கியதில் இதுவரை சுமார் 9000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டத்து.

75 வீடுகள் வரை பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இடியுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை மற்றும் மிகப்பெரிய மணற்புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்து இருந்ததால் பெருத்த உயிர் சேதத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முடிந்ததாக அப்பகுதியின் மேயர் மரியோ ரோஜாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலியில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய ராட்சச மணற்புயல் புழுதிகளுடன் முன்நகர்ந்துவரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here