சிறுவர், சிறுமியர்களுக்கு தடுப்பூசி வழங்க பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல்!

0

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு அச்சமின்றி செல்ல உதவும்.

சிறுவர்- சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஜேர்மனியில் 12 வயதுக்கு அதிகமான சிறுவர், சிறுமிகளுக்கு ஜூன் 7ஆம் திகதி பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, பைஸர் நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here