சிறுவர் சிறுமிகள் தொடர்பில் பிரித்தானிய பெற்றோருக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆறு வயதேயான 39,635 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியான Sir David Thompson என்பவர் கூறும்போது, சில கும்பல்கள், சிறுவர்களுக்கு பணம், உடைகள் ஷூக்கள் முதலானவற்றைத் தருவதாக ஆசை காட்டி அவர்களை கார்களிலிருந்து பொருட்களை திருட பழக்கியுள்ளனர்.

பெரும்பாலும் அந்த கும்பல்களைச் சேர்ந்தவர்கள் போதை கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டிலிருந்து, 13 வயதுக்குட்பட்ட சுமார் 1,000 சிறுவர்கள், காரிலிருந்து பொருட்களை திருடுவது, கார்களை திருடுவது முதலான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் முதலான சமூக ஊடகங்களில், இந்த கும்பல்கள் சிறுவர்களை திருடத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலேயே லண்டன்தான் கார் திருட்டின் தலைமையகமாக விளங்குவதாக தெரிவித்த அவர், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 7,847 பேர் 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here