சிறுவர்களுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவுகள் இல்லை!

0

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை செலுத்திவிட்டு, இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

இதன் பயனாக ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது.

ஆனால், குழந்தைகளுக்கு எந்த வகை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பதில் பெற்றோர் பலரும் கேள்வி எழுப்பி வருகிறனர்.

இந்நிலையில், பன்னிரெண்டு முதல் பதினைந்துக்குட்பட்டவர்களுக்கு Pfizer நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்புத் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

Pfizer தடுப்பூசி செலுத்துவதால் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை.

எனவே Pfizer கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, Pfizer நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதே போல் கனடாவும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here