சிறுமிகளை குறி வைத்து வன்கொடுமை செய்த முதியவர் கைது!

0

அமெரிக்காவில் லின்கால்னை சேர்ந்த ஆண்ட்ரூ கே கசட் 63 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் குறித்த நபர் சிறுமிகளை குறிவைத்து வன்கொடுமை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி 15 வயதான சிறுமி, 12 வயதான சிறுமி, 11 வயதான சிறுமி மற்றும் 10 வயதான சிறுமி ஆகியோரை ஆண்ட்ரூ 2017 – 2021 காலக்கட்டத்தில் வன்கொடுமை செய்திருக்கிறார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாங்கள் ஆண்ட்ரூவால் தான் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஆண்ட்ரூவிடம் பொலிசார் விசாரணை நடத்திய பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது வன்கொடுமை, சிறார்கள் மீது பாலியல் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here