சிறார்களுக்கு தடுப்பூசி அளிப்பது தொடர்பில் சுவிஸ் நிபுணர்கள் கருத்து

0

சுவிஸில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிறார்களுக்காக பைசர் நிறுவனம் சிறப்பு டோஸ்களை உருவாக்கியுள்ளது.

சுவிஸ் மட்டுமின்றி உலக நாடுகளில் இதே வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கான திட்டத்துடன் மாடர்னா நிறுவனமும் ஜூன் முதல் களமிறங்க உள்ளது.

இந்நிலையில், சுவிஸில் தடுப்பூசிக்கு எதிரான மன நிலை சிறார்களில் எழுந்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சில பெற்றோர்கள், 12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி தொடர்பில் எதுவும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத போது அவர்களை கட்டாயப்படுத்துவது சரியா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here