சிறப்பு தொழுகையின் போது மசூதியொன்றில் குண்டுவெடிப்பு…! 12 பேர் பலி

0

ஆப்கானிஸ்தானில் காபூலின் ஷகர்தரா மாவட்டத்திலுள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது.

இதில் அந்த மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் காபூலிலுள்ள மகளிர் பாடசாலைக்கு அருகே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான மாணவிகள் உள்பட 90 பேர் கொல்லப்பட்டதும், 160க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here