சிரியாவில் வணிக வளாகத்தில் பாரிய தீ விபத்து! பலர் பலி

0

சிரியாவில் தலைநகர் டாமாஸ்கசில் 6 மாடி கொண்ட வணிக வளாக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.

அப்போது வணிக வளாகத்தில் இருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.

பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here