சிரியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம்! அமெரிக்க படைகள் மீது தாக்குதல்

0

சிரியாவில் அமெரிக்க துருப்புகள் தங்கும் வசதிகள் மீது இரண்டு அடுத்தடுத்த ராக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் சேவை உறுப்பினர்கள் சிலர் காயமடைந்து இருப்பதாக அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு சிரியாவின் கோனோகோ மற்றும் கிரீன் வில்லேஜ் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க துருப்புகளின் கட்டமைப்பு மீது புதன்கிழமை பிற்பகல் அடுத்தடுத்த இரண்டு ராக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிலர் சிறியளவு காயமடைந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு அல்லது உபகரணங்கள் எதுவும் சேதம் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் எந்த தீவிரவாத அமைப்பு உள்ளது என இதுவரை தெரியவில்லை.

ஆனால் முன்னதாக புதன்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் இணைந்த குழுக்களின் உள்கட்டமைப்புகளில் அமெரிக்கா படையினர் வான்வழியாக பதிலடி தாக்குதல் நடத்தினர்.

மேலும் ஜனாதிபதி ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய கட்டளையின் தகவல் தொடர்பு இயக்குனர் கேணல் ஜோ புசினோ ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here