சிந்திக்கும் திறனை இழக்கும் கொரோனா நோயாளிகள்…. பிரித்தானிய ஆய்வாளர்கள்

0

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கொரோனா பாதிப்பு சிந்திக்கும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளது.

கொரோனா தொற்று மூளையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் கண்டறிய சுமார் 81,337 பிரித்தானிய மக்களின் அறிவுசார் திறன்களை ஜனவரி மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டன.

இதில் 12,689 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டும், இந்த ஆய்வு நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, கல்வித்தகுதி, தற்போதுள்ள அவர்களின் மருத்துவ பிரச்சினைகள் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு முடிவுகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எஞ்சியவர்களுடன் ஒப்பிடும்போது சிந்தனை திறன்களில் கணிசமான பின்னடைவை சந்தித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக ஏழு ஐ.க்யூ புள்ளிகள் வரையில் இழப்புடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் மூளையானது 10 ஆண்டுகளில் ஏற்படும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

மட்டுமின்றி, லேசான அறிகுறிகளுடன், குடியிருப்பில் இருந்தே குணமடைந்தவர்களும் சிந்திக்கும் திறனை இழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட பெரும்பாலானவர்கள் தர்க்கரீதியான சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன் உள்ளிட்டவைகளை இழந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here