சித்ரா தற்கொலை செய்து கொண்ட அறைக்கு சென்ற அம்மா: நடந்தது என்ன ?

0

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ராவின் தற்கொலைக்கு உண்மையில் என்ன காரணம் என்ற மர்மம் இன்னும் விலகாத நிலையில் அவருடைய கணவர் ஹேமந்த் காரணமாக இருக்கலாம் என்று அவர் கைது செய்யப்பட்டார் என்பதும், அதன் பின் அவரும் ஜாமினில் விடுதலையாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சித்ரா தூக்கில் தொங்கிய அறையில் இருந்த சித்ராவின் பொருள்களை எடுத்துக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினருக்கு போலீசார் அனுமதி அளித்தனர். இதனை அடுத்து சித்ராவின் அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் அந்த அறைக்கு சமீபத்தில் சென்றனர்.

போலீஸ் துணையுடன் சித்ரா தற்கொலை செய்துகொண்ட 113வது நம்பர் அறையை திறந்ததும் அவருடைய அம்மா கதறி அழுதார். அவர் தூக்கில் தொங்கிய சீலிங் ஃபேனி பார்த்து கதறி அழுத அவர் பின்னர் கட்டில் மேல் ஏறி அந்த சீலிங் ஃபேனை பிடித்து தொங்கினார். இந்த சிலிங் ஃபேன் எனக்கே எட்டும்போது என் மகள் எப்படி இதில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு இருக்கமுடியும்? என்று அவர் கதறி அழுதார். பின்னர் அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வந்த சித்ராவின் தாயார் ’சித்ரா நீ எங்கம்மா இருக்க? என்று கேட்டபடி கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்தது

இதனை அடுத்து சித்ரா கடைசிய பயன்படுத்திய பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து அவருடைய உறவினர்கள் சென்று விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here