சிக்கன் கபாப்’பில் காரம் குறைவு… மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

0

இந்தியாவில் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48).

இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

சுரேஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், குடித்துவிட்டு வந்த அவர், ‘சிக்கன் கபாப்’ செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.

அப்போது கபாப்பில் காரம் குறைவாக இருந்ததாகவும் இதனால் கோபமடைந்த சுரேஷ் மனைவியை வீட்டில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

மேலும் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு அவர் காவல்துறைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here