சிகரெட் விற்பனைக்கு தடை செய்த நாடு!

0

நியூசிலாந்தில் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2027-ல் 14 வயதை எட்டும் அனைவருக்கும், நிரந்தரமாக சிகரெட் விற்க தடை விதிக்கப்படவுள்ளது.

இதன், மூலம் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

இதனை நியூசிலாந்து சுகாதாரத்துறையின் அமைச்சர் ஆயிஷா வெரால் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here