கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று விண்ணப்பிக்க முடியுமென பரிட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளாhர்.
பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அல்லது தொலைபேசியில் ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரச பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்ப்புடைய அளவு விண்ணப்பங்கள் தற்போது கிடைத்துள்ளன. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான காலம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்ததுடன், வழங்கப்பட்டிருந்த காலத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.