சாக்குமூடைக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை…! அதிர்ச்சி தகவல்

0

பங்களாதேஷின் பிரபல நடிகையான ரைமா இஸ்லாம் ஷிமு (45) காணாமல் போயிருந்துள்ளார்.

நேற்று முன்தினம் கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலத்தின் அருகே சாக்குமூட்டைக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், நடிகையின் சடலத்தை மீட்டுள்ளதுடன், அவரின் உடலில் பல காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்யப்பட்டிருக்காலம்.

பின்னர் அவரது சடலம் பாலத்தின் அருகே வீசப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர், பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here