சவேந்திர சில்வாவிற்கு தடை விதிப்பதற்கு கோரிக்கை விடுக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்

0

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடைசெய்யுங்கள் என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த விடயத்தை இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும் என்று சாரா ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here