சவாலான ஆய்வை மேற்கொள்ளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்….!

0

உலகளவில் கொரோனா தொற்றுக்கு விஞ்ஞானிகள் பல ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரணமாக குணமானவர்களுக்கு, மீண்டும் அதே வைரஸை உடலில் செலுத்தி, அதனால் ஏற்படும் விளைவுகளை கண்டறியும் புதிய ஆயவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு பிரித்தானிய அரசு அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால், அவரது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் எதிர்வினைகள் மற்றும் மாற்றத்தை கண்டறிய உதவும் என நம்பப்படுகிறது.

இந்த ஆய்வுக்காக ஏற்கெனெவே தொற்றிலிருந்து குணமாகி ஆரோக்கியமாக இருக்கும் 18 முதல் 30 வயதான 67 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சோதனையில் பங்கேற்கும் அவர்களுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கப்படும் மற்றும் ஒரு மருத்துவமனையில் 17 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் அல்லது மீண்டும் பூரணமாக குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வு 12 மாதங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here