சவப்பெட்டிக்குள் 50 மணித்தியாலம் செலவிட்ட அமெரிக்கரின் சாகசம்

0

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன் மிஸ்டர் பீஸ்ட் என பரவலாக அறியப்படுபவர்

இந்நிலையில் சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கபட்ட அனுபவத்தை அவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ 50 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமராவும் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

அதன் உதவியோடு இந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார்.

22 வயதான அவர் சவப்பெட்டிக்குள் இரண்டு நாட்களுக்கும் கூடுதலான நேரத்தை செலவிட்டுள்ளார்.

எனது முதுகு ரொம்பவே வலிக்கிறது. நான் பீதியில் உறைந்து போயுள்ளாகவும், மனதளவில் வெறுமையாக உணர்கிறேன்.

இந்த அனுபவம் ரொம்பவே மோசமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

வழக்கமாக அவரது வீடியோக்கள் 30 மில்லியன்ஸ் வியூஸ்களை எட்டுமாம். சில வீடியோக்கள் 100 மில்லியன்களை கூட கடந்தது உண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here