முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டிற்கு சற்றுமுன்னர் தீயிடப்பட்டது.
மல்வானை பகுதியிலுள்ள வீட்டிற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
தீ வைப்பதற்கு முன்னர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த வீடு தீப்பற்றி எரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.