யாழ். நீதிமன்றம் அழைத்துவரப்பட்டார் மணிவண்ணன்

0

யாழ். மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் சற்றுமுன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு – வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம்1 மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா போது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் சற்றுமுன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here