சற்றுமுன்னர் துமிந்த சில்வா விடுதலை!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் கீழ் 16 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவும் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 2016 முதல் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here