சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி யாழில் ஆரம்பம்!

0

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், பேரணியாகச் சென்று நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளது.

இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here