சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா படம் !

0

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்த நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் சர்வதே திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார்.ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார்.

இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஆஸ்கர் நாமினேசனுக்கும் சென்ற பெருமை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் சூர்யா என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர் படம் முதன் முதலில் அமேசான் பிரைமில் வெளியானது.

அதேபோல் இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான்பிரைமில் வெளியானது.

இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்த சூரரைப் போற்று படம் சர்வதே திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

இந்த ஆண்டில் பனோரம சங்கை திரைப்பட விழாவில் திரையிட சூர்யாவின் சூரரைப் போற்று

ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் இதைச் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Happy that #SooraraiPottru #PraiseTheBrave enters Panorama Section of Shanghai International Film Festival 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here