சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர்!

0

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமான ஆலி ராபின்சன் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் நியுசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஆலி ராபின்சன். ஆல்ரவுண்டரான இவர் 7 விக்கெட்களையும் 42 ரன்களையும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்து பிரபலமானார். அதே சமயம், அவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நிறவெறி மற்றும் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்திருந்தவையும் பகிரப்பட்டு அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து இப்போது அவரை தற்காலிகமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த பதிவுகளை பகிரும் போது அவர் தனது பதின்பருவத்தில் விவரம் அறியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here