சர்வதேச எல்லைகளை முழுமையாக மீளத் திறக்கும் நியூஸிலாந்து!

0

நியூஸிலாந்தில் தமது சர்வதேச எல்லையை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி முழுமையாக மீளத் திறக்கும் என நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.

பயணக் கப்பல்களும், குறித்த தினத்தில் உள்ளுர் துறைமுகங்களுக்கு வரவேற்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளைத் திறப்பதானது, அவசரத் திறன் பற்றாக்குறையைப் போக்கவும், சுற்றுலாவைத் துறையை ஆரம்பிக்கவும் உதவும்.

நியூஸிலாந்தின் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை தாங்கள் உருவாக்குவதாகவும் அந்த நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here