தாய்லாந்தில் திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி நடைபெற்றது.
அதில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம் வென்றார்.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சுற்றில் 22 அழகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிலிப்பைன்சை சேர்ந்த தொழில் முனைவோர் பிலிப்பினா ரவேனா, சர்வதேச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முடி சூடப்பட்டார்.
கொலம்பியா மற்றும் பிரான்ஸ் அழகிகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றனர்
