சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு வந்த எச்சரிக்கை

0

பொருளாதார நெருக்கடியால் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கோபத்தில் இருக்கும் மக்களிடம் சுமூகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் மக்களிடம் போராட்டத்தை தூண்டிவிட செய்யக்கூடாது எனவும், அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா.சபை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here