சரத் பொன்சேகாவிடம் நஷ்ட ஈடு கோரும் முதளிதரன்…

0

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முதளிதரன் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகாவிடம் ஒரு பில்லியன் ரூபா மான நஷ்ட ஈடு கோரி அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 15ம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கூட்டத்தில் சரத் பொன்சேகா கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதில் முரளிதரனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் இதனால் தாம் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளானதாகவும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல் கூட்டத்தில் முரளிதரனுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் காணி குறித்து சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் போலியானது எனவும் முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக தெரிவித்துள்ளார்.

எனவே இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென முரளிதரன் கோரியுள்ளார்.

ஏழு நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நீதிமன்றில் அவதூறு வழக்குத் தொடர நேரிடும் என சட்டத்தரணிகள் ஊடாக சரத் பொன்சேகாவிற்கு, முரளிதரன் அறிவித்தல் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here