சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ நிறுவனம் பதில் வழங்கியது!

0

சமையல் எரிவாயுவுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

தமது எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே, எரிவாயுவிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிடுகின்றது.

4000 மெற்றிக் தொண் சமையல் எரிவாயு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here