சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் நாயின் செயல்

0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனெல்ல தெவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்தது.

இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.

மண் குவியலில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சடலங்களை கண்டுபிடிக்க நாய் உதவியுள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர்.

ஆனால் அது திரும்பி வந்து அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது.

மண்ணால் புதைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை எங்கு தேடுவது என்பது மீட்பவர்களுக்கு உதவியுள்ளது.

இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தன்பக்கம் திருப்பிய நாயின் செயல் - தமிழ்வின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here