சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான விளம்பரங்கள்… சச்சின் வருத்தம்

0

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்று பல ஆண்டுகள் கடந்துள்ளது.

48 வயதாகும் அவருக்கு இன்றளவும் அவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது.

மேலும் அவர் பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரான்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷபதிவு ஒன்றை வெளியிட்டு்ள்ளார்.

அதில் கேசினோ எனப்படும் சூதாட்ட விளம்பரங்களில் எனது புகைப்படத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனது முகத்தை மார்பிங் செய்து நான் கேசினோ விளையாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல விளம்பரங்கள் வெளியாகியுள்ளது.

சூதாட்டம், புகையிலை, மது இதுபோன்ற விடயங்களுக்கு நான் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்ததில்லை.

அதுபோன்ற விளம்பரங்களிலும் நான் நடிக்கவில்லை.

மக்களின் கவனத்தை திசை திருப்பி தவறாக வழிநடத்தும் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் துணை நிற்க மாட்டேன்.

இந்த விவகாரத்தில் சட்ட குழுவினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக தனது முகம் பகிரப்பட்டு தவறான விளம்பரங்கள் தவறான செய்திகள் சென்றடைவதால் மக்கள் அதிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here