சமூகவலைத்தளத்தில் அனைவரையும் கவர்ந்துள்ள காதல் ஜோடியின் புகைப்படம்….

0

ரஷ்யா உக்ரைன் இடையே மூன்றாவது நாளாக போர் நடைபெற்றுவருகின்றது.

இந்த சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காதல் ஜோடியின் பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பல நாடுகளும் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் உலகில் அமைதி மற்றும் காதலை நிலைநாட்டும் நோக்கில் 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட காதல் ஜோடியின் புகைப்படம் ஒன்றை இணையதளவாசிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் ஆண் ஒருவர் உக்ரைன் நாட்டு தேசிய கோடியை போர்த்திக்கொண்டுள்ளார்.

அவரின் காதலி ரஷ்ய நாட்டு தேசியக்கொடியை போர்த்திக்கொண்டும் கட்டியணைத்தபடி காதலை பரிமாறி கொள்கின்றனர்.

இது கடந்த 2019 ஆம் ஆண்டு போலந்தில் உள்ள வார்சாவில் நடைபெற்ற பெலாருசன் ராப்பர் மேக்ஸ் கோர்ஷ்யின் கச்சேரியில் ஜூலியானா குஸ்னெட்சோவாவும் அவரது வருங்கால மனைவியும் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here