சந்தர்ப்பங்கள் விரைவாக பயன்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் அழைப்பு!

0

நாட்டின் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாளர்களாக மாறுவதுடன் எமது மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் பலமானதாக உருவாகுவதற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்தும் சரியான முறையில் விரைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி, பூநகரி கடற்றொழில் பிரதேசங்களுக்கு நேற்று(புதன்கிழமை) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு நாடு முகங்கொடுத்துள்ள சூழலில், பிரதேசக் கடற்றொழிலாளர்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான அழைப்பிற்கு இணங்க குறித்த விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாத்துக் கொண்டு, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை எமது மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதே என்னுடைய இலக்கு” எனவும் தெரிவித்தார்.

பூநகரி கல்முனை, மண்ணித்தலை, கெளதாரிமுனை, வினாயகபுரம் மற்றும் வினாசியோடை ஆகிய பகுதிக்கு கள விஜயத்தை மேற்கொண்டு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர், பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்படட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அதேவேளை, பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்கைளை பார்வயிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டைப் பண்ணைகளின் சீரான வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here