சத்தமாக பாடல் பாடிய நபரை கொடூரமாக கொன்ற தந்தை…..

0

இந்தியாவில் தனது மகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சத்தமாக பக்திப் பாடல் பாடிய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை கேரள உயர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சம்பவ தினமான 2011 மார்ச் 19 ஆம் திகதியன்று சசிதரன் பிள்ளை (கொல்லப்பட்டவர்) என்பவர் தனது வீட்டில் பக்திப் பாடல்களை சத்தமாகப் பாடிக்கொண்டிருந்துள்ளார்.

அவ்விடத்துக்கு வந்த அயல்வீட்டுக்காரர், தனது மகளின் கற்றல் நடவடிக்கைக்கு இந்தப் பாடல் இடையூறு விளைவிப்பதாகக் தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

அதன்போது, வாக்குவாதம் முற்றியதில், சசிதரன் பிள்ளையை, கூரிய ஆயுதத்தால் மூன்று தடவைகள் தாக்கி அயல்வீட்டு நபர் கொலை செய்துள்ளார்.

இதன்போது, மேலும் இருவர் உடன் இருந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகளையடுத்து.

நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here