சடலங்களுடன் நோயாளிகள் படுக்கும் அவல நிலையில் இலங்கை!

0

இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை விடுதிகள் முற்றாக நிரம்பிவழியும் நிலையில் ஒரு படுக்கையை 3 நோயாளர்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 நோயாளர்கள் ஒரே கட்டிலைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழக்கும்போது ஏனைய இருவரும் அதனை அச்சத்துடன், மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பரிதாபங்களும் நேருவதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கொரோனா விடுதிகளில் தினசரி சாதாரணமாக பல மரணங்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் மூச்சுவிடக்கூட நேரமின்றி ஓயாது பணியாற்றி வருகின்றனர். இதுவே தற்போதைய நாட்டில் நிலைமை எனவும் சுகாதார துறைசர்ந்தவர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here