சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தங்கள் சமூக வலைளத்தளங்களில் பதிவிட்டு சஜித் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.

தனது மனைவிக்கு கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதனால் நேற்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனை செய்து கொண்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் போது மனைவிக்கு கொவிட் தொற்று உறுதியானது எனவும் பின்னர் தாமும் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதன் போது தமக்கும் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here