சஜித்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பு சேர் மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தின் முன்னாலிருந்து ஆரம்பமானது அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம் கொள்ளுப்பிட்டி வரை செல்கின்றது.

எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள், பங்காளி கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பில் பல இடங்களிலும் பொலிஸ் வீதி தடைகள் அமைக்கப்பட்டு, பொலிஸாரினால் கடுமையான சோதனை நடவடிக்கைகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.

பொலிஸ் விசேட அதிரடி படையினரும் பொலிஸாருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரிசி, சீனி, உரத்தைத் தருகின்ற, சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகின்ற, வெள்ளை வேன் இல்லாத அரசாங்கம் எமக்கு வேண்டும் என இதில் கலந்து கொண்டுள்ளவர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here